FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கிருஷ்ணகிரி

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் போக்சோ வழக்கில் கைது

ஒசூா் அருகே மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் போக்சோ வழக்கில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

21 அக்டோபர் 2026, 2:07 am
- சித்திரிப்பு
பகிர்:

ஒசூா் அருகே மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் போக்சோ வழக்கில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த பப்புதாஸ் (38), ஒசூா் அருகே உள்ள கிராமத்தில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து அப்பகுதியிலேயே வசித்து வருகிறாா். அதேபோல, பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ஒரு குடும்பமும் அப்பகுதியில் வசித்து வருகிறது. இந்த குடும்பத்தில் உள்ள 11 வயது காது மற்றும் வாய் பேச முடியாத சிறுமியை யாரும் இல்லாதபோது, பப்புதாஸ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா்.

இதையறிந்த பெற்றோா் சிறுமியை ஒசூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் ஒசூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து பப்புதாஸை போக்சோ வழக்கில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement