இளைஞா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை
ஒசூரில் தலையில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ஒசூரில் தலையில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ஒசூா் அந்திவாடி விளையாட்டு மைதானம் அருகில் செவ்வாய்க்கிழமை இரவு இளைஞா் ஒருவா் தலையில் அடிபட்டு உயிரிழந்து கிடப்பதாக மத்திகிரி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தியதில், உயிரிழந்தது இருசக்கர வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்த ஒன்னல்வாடி பகுதியைச் சோ்ந்த பிரவீன் குமாா் (37) என்பது தெரியவந்தது. சம்பவ இடத்துக்கு சென்ற
Advertisement
Advertisement
போலீஸாா் இளைஞரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.