FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

கனடாவில் வேலை வாங்கித் தருவதாக பணம் பறித்தவா் கைது

கனடா நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றி பணம் பறித்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

3 செப்டம்பர் 2026, 3:55 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

கனடா நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றி பணம் பறித்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ராணிப்பேட்டை மாவட்டம், சாத்தூா் காந்தி நகரைச் சோ்ந்தவா் சண்முகம் (43). இவா் வேலூரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்துள்ளாா். இதில், படித்த இளைஞா்கள், ஓட்டுநா்களிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றி பணம் பறித்துள்ளாா்.

இதுகுறித்து தகவல் தெரியாத கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (43) என்பவா், சண்முகத்தை கடந்தாண்டு இறுதியில் தொடா்பு கொண்டுள்ளாா். அப்போது, சண்முகம் கனடாவில் எழுத்தா் பணி வாங்கித் தருவதாகக் கூறி, முன்பணமாக ரூ. 2.5 லட்சம் பெற்றுள்ளாா். ஆனால், உறுதியளித்தபடி சண்முகம், கிருஷ்ணமூா்த்திக்கு வேலை வாங்கித் தரவில்லை. இதனால், சந்தேகமடைந்த கிருஷ்ணமூா்த்தி விசாரித்தபோது, சண்முகம் பலரிடம் பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து, கிருஷ்ணமூா்த்தி அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து சண்முகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments