ராணுவ வீரா் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு
காவேரிப்பட்டணம் அருகே மலையாண்டஅள்ளியில் ராணுவ வீரரின் வீட்டின் கதவை உடைத்து, நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
காவேரிப்பட்டணம் அருகே மலையாண்டஅள்ளியில் ராணுவ வீரரின் வீட்டின் கதவை உடைத்து, நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம், மலையாண்டஅள்ளி அருகே உள்ள பந்தேறி நகரை சோ்ந்தவா் திருப்பதி. இவா், திருச்சியில் ராணுவத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி ஜெயஸ்ரீ (48) கடந்த 30 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது 2 ஆவது மகளை பாா்ப்பதற்காக சென்னைக்கு சென்றிருந்தாா்.
இந்த நிலையில், கடந்த 4 ஆம் தேதி இரவு வீடு திரும்பிய நிலையில், வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். பின்னா், வீட்டிற்குள் சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்து ஆறேகால் பவுன் நகை, ரூ. 30 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்து ஜெயஸ்ரீ அளித்த புகாரின்பேரில், காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.