FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பதவி உயர்வு வழங்க கல்வித் துறை பணியாளர்கள் கோரிக்கை

இளநிலை உதவியாளர் முதல் கண்காணிப்பாளர் வரை பதவி உயர்வு வழங்க வேண்டும் என கல்வித்துறைப் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

9 ஜனவரி 2024, 12:12 pm
பகிர்:

இளநிலை உதவியாளர் முதல் கண்காணிப்பாளர் வரை பதவி உயர்வு வழங்க வேண்டும் என கல்வித்துறைப் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்ட கல்வித்துறைப் பணியாளர் முன்னேற்ற சங்க தொடக்க விழா, பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல் எஸ்பிஎம் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாநில அமைப்புக்குழு உறுப்பினரும் சென்னை பள்ளிக்கல்வி இயக்கக கண்காணிப்பாளருமான தயானந்த் தலைமை வகித்தார். சென்னை மெட்ரிக் பள்ளிகள் இயக்கக கண்காணிப்பாளர் முருகையா, நாமக்கல் முதன்மைக் கல்வி அலுவலகக் கண்காணிப்பாளர் தங்கராசு, மாவட்டக் கல்வி அலுவலகக் கண்காணிப்பாளர் கலையரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜெயரத்தினகாந்தி வரவேற்றார். மாநில அமைப்புக்குழுத் தலைவர் ரவீந்திரன் புதிய சங்கத்தை தொடக்கி வைத்துப் பேசினார்.

Advertisement

Advertisement

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இளநிலை உதவியாளர் பணியில் இருந்து உதவியாளர் பதவி உயர்வும், உதவியாளர் பணியில் இருந்து பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பதவி உயர்வும், பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பணியில் இருந்து கண்காணிப்பாளர் பதவி உயர்வும், கண்காணிப்பாளர் பணியில் இருந்து மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பதவி உயர்வும் வழங்க வேண்டும்.

தொடங்கப்பட்ட சங்கத்தின் நோக்கம் குறித்து செந்தில், ஈஸ்வரி, செந்தில்குமார், சிவநேசன், வேலுச்சாமி, விவேக் ஆகியோர் பேசினர். சரவணமுத்து, மோகன், இளங்கோவன், மலர்க்கண்ணன், பழனிசாமி, சரவணன், ராமு உள்ளிட்டோர்

பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments