FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பள்ளிவாசல் கோபுரம் கட்ட ஆட்சேபம்: ஆட்சியரிடம் மனு

பள்ளிவாசலில் கோபுரம் கட்டும் பணியை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் இந்து ஆன்மிக அமைப்பினர் வலியுறுத்தினர்.

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

பள்ளிவாசலில் கோபுரம் கட்டும் பணியை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் இந்து ஆன்மிக அமைப்பினர் வலியுறுத்தினர்.

திருச்செங்கோடு அனைத்து இந்து ஆன்மிக அமைப்புகள், மகளிர் அமைப்புகளின் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தியிடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:

திருச்செங்கோடு நகரம் புராதன நகரம் என அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது இங்கு 9 மீட்டர் உயரத்துக்கு மட்டுமே கட்டடம் கட்ட வேண்டும்.

Advertisement

Advertisement

ஆனால், திருச்செங்கோடு மஜீத் தெருவில் உள்ள மசூதியில் 70 அடி உயரத்துக்கு இரண்டு கோபுரங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதன்மீது ஒலிபெருக்கி வைக்கவும் திட்டமிட்டுள்ளது. இது சட்டத்துக்கு புறம்பானது. இதனால், இந்துக்களின் வழிபாட்டுத் தலங்கள், பள்ளி மாணவர்கள் பாதிப்படைவர் என்று கோட்டாட்சியடம் முறையிட்டதன் பேரில், அந்தப் பணியை நிறுத்ததும்படியும், கோபுர சாரத்தை பிரித்து எடுக்க வேண்டும் எனவும் கடந்த 7ஆம் தேதி அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், திட்டமிட்டபடி கோபுரங்கள் கட்டப்பட்டு, ஒலிபெருக்கி வைக்கப்படும் என சிலர் கூறுகின்றனர்.

இந்து, முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கோபுரப் பணியை நிறுத்த நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments