FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

 அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மையத்திற்குள்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் கபிலர்மலை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

9 ஜனவரி 2024, 12:12 pm
பகிர்:

 அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மையத்திற்குள்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் கபிலர்மலை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கபிலர்மலை வட்டாரத்திலிருந்து 18 வயதிதுக்குள்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகள் உள்பட 202 மாணவ, மாணவியர்கள் முகாமில் கலந்து கொண்டனர். அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்டத் திட்ட அலுவலர் தனசேகரன் முகாமை மேற்பார்வையிட்டார்.

கபிலர்மலை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பழனியம்மாள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சுரேஷ்குமார், அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Advertisement

Advertisement

மருத்துவ முகாமில் 18 வயதுவரை உள்ள மனவளர்ச்சி குன்றியோர், புற உலக சிந்தனையற்றோர், காது கேளாதோர், பார்வைக் குறைபாடு, உடலியக்கக் குறைபாடு, பேச்சுத்திறன் குறைபாடு, மூளை முடக்குவாதம், தசை இயக்கக் குறைபாடு மற்றும் அன்னப்பிளவு குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவியருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை 3 பேருக்கு வழங்கப்பட்டது.

3 பேர் அறுவை சிகிச்சைக்குத் தேர்வு செய்யப்பட்டனர். 61 பேருக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன. வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் முகாமுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments