வாழைத்தார் விலை 50 சதம்வரை உயர்வு
பரமத்தி வேலூர் ஏலச் சந்தையில் வாழைத்தார் விலை 50 சதம் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
பரமத்தி வேலூர் ஏலச் சந்தையில் வாழைத்தார் விலை 50 சதம் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
பரமத்தி வேலூர் காவிரி கரையோரப் பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினமும் லாரிகளில் கொண்டு செல்லப்படுகின்றன.
மேலும், சிறு விவசாயிகளும் ஏலச் சந்தைக்கு வாழைத்தார்களை நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர். இதனால், விவசாயிகள் ஏராளமான வாழைத்தார்களை ஏலச் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். கடந்த வாரம் 1,500 வாழைத்தார்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 800 வாழைத்தார்கள் விற்பனைக்கு வந்தன. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் ரூ.200-க்கும், ரஸ்தாலி ரூ.300-க்கும், பச்சைநாடன் ரூ.250-க்கும், கற்பூரவள்ளி ரூ.200-க்கும் ஏலம் போனது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.4-க்கும் ஏலம் போனது.
திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூவன் ரூ.300-க்கும், ரஸ்தாலி ரூ.350-க்கும், பச்சைநாடன் ரூ.300-க்கும், கற்பூரவள்ளி ரூ.300-க்கும் ஏலம் போனது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.6-க்கு விற்பனையானது.
கடந்த வாரத்தை விட திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வாழைத்தார்களின் வரத்து குறைந்த போதும், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.