நாமக்கல்லில் திருவிளக்கு பூஜை
உலக நன்மை வேண்டி நாமக்கல் பாரத அன்னை சேவா அறக்கட்டளை சார்பில் திருவிளக்கு பூஜை நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
உலக நன்மை வேண்டி நாமக்கல் பாரத அன்னை சேவா அறக்கட்டளை சார்பில் திருவிளக்கு பூஜை நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
நாமக்கல் கோல்டன் பேலஸ் ஹோட்டல் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற சர்வ ஐஸ்வர்ய செளபாக்கிய ஹோமம் மற்றும் திருவிளக்கு பூஜையை ஜெயம், மல்லிகா, பாக்கியலட்சுமி, லட்சுமி நர்மதா, கோமதி ஆகியோர் தொடங்கிவைத்தனர். கேரளத்தைச் சேர்ந்த மாதா அமிர்தானந்தமயி மடத்தின் சுவாமி ராமகிருஷ்ணானந்தஜீ பங்கேற்று பூஜையை நடத்தினார். பூஜைக்கான ஏற்பாடுகளை நாமக்கல் பாரத அன்னை சேவா அறக்கட்டளை தலைவர் ஆர். குழந்தைவேல், செயலர் எம். சுப்ரமணியம், துணைத் தலைவர் ஆர். ஹரிஹர கோபாலன், பொருளாளர் ஆர். சண்முகம் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.