FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மஹாசண்டி யாகம்

நாமக்கல் அன்பு நகர் சுயவேம்பு மாரியம்மன் மண்டலாபிஷேக பூர்த்தி விழா மற்றும் உலக நன்மைக்காக மஹாசண்டி யாகம் ஞாயிற்றுக்கிழமைநடைபெற்றது.

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:

நாமக்கல் அன்பு நகர் சுயவேம்பு மாரியம்மன் மண்டலாபிஷேக பூர்த்தி விழா மற்றும் உலக நன்மைக்காக மஹாசண்டி யாகம் ஞாயிற்றுக்கிழமை
நடைபெற்றது.
நாமக்கல் மோகனூர் சாலை அன்பு நகர் சுயவேம்பு மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா மண்டலாபிஷேக பூர்த்தி, மஹா சண்டியாக பெருவிழா கடந்த 4-ஆம் தேதி துவங்கியது. இதில், விநாயகர் வழிபாடு, சங்கல்பம், புண்ணியாக வாசனம், பஞ்ச கவ்யம், பூதசுத்தி உள்ளிட்டவை நடைபெற்றது. இரவு 8 மணிக்கு சதுஷ் சஷ்டி, யோகினி, பைரவ பலி பூஜை, பிரார்த்தனை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மண்டலாபிஷேக பூர்த்தி விழா மற்றும் உலக நன்மைக்காக 5-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு மங்கள இசை, வேத பாராயணம், லலிதா சகஸ்ராம பாராயணம், துர்கா, லட்சுமி, சரஸ்வதி மற்றும் 13  அத்தியாயங்களினால், 700 ஸ்லோகங்களினால் மஹா சண்டியாக வேள்வி, திரவ்ய வேள்வி, கன்னியா பூஜை, வடுக பூஜை, சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை செய்து மங்கள மஹா பூர்ணாஹூதி, ஷோடச உபசார வழிபாடு மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது. பகல் 12 மணிக்கு சுயவேம்பு மாரியம்மனுக்கு கலசாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு சுயவேம்பு மாரியம்மனுக்கு மாவிளக்கு பூஜை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments