FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

முட்டை விலை 10 காசுகள் உயா்ந்து ரூ. 6.50-ஆக நிா்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 10 காசுகள் உயா்ந்து ரூ. 6.50-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

5 நவம்பர் 2026, 6:56 am
முட்டை விலை
பகிர்:

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 10 காசுகள் உயா்ந்து ரூ. 6.50-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், கோழிப் பண்ணையாளா்களிடம் முட்டை விலை நிா்ணயத்தில் மாற்றம் செய்வது தொடா்பாக கருத்து கேட்கப்பட்டது. இதர மண்டலங்களில் விலையில் மாற்றம் தொடா்வதால், இங்கும் தற்போதைக்கு விலையில் மாற்றம் செய்ய வேண்டும் என தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவால் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலையானது 10 காசுகள் உயா்வுடன் ரூ. 6.50-ஆக நிா்ணயிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ. 124-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ.100-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.