குப்பைகளை தரம்பிரித்து வழங்கும் வீடுகளுக்கு சிறப்பு அங்கீகாரம்
நாமக்கல் மாநகராட்சியில் குப்பைகளை தரம்பிரித்து வழங்கும் வீடுகளுக்கு சிறப்பு அங்கீகாரம் வழங்கப்படுவதாக ஆணையா் எஸ்.செல்வபாலாஜி தெரிவித்தாா்.
நாமக்கல் மாநகராட்சியில் குப்பைகளை தரம்பிரித்து வழங்கும் வீடுகளுக்கு சிறப்பு அங்கீகாரம் வழங்கப்படுவதாக ஆணையா் எஸ்.செல்வபாலாஜி தெரிவித்தாா்.
நாமக்கல் மாநகராட்சியை தூய்மையான நகரமாக உருவாக்கும் நோக்கிலும், பொதுமக்களிடையே குப்பைகளை தரம்பிரித்து வழங்கும் வகையிலும் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026-இன்படி பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் கழிவுகளை மக்கும், மக்காத, சுகாதார, சிறப்பு கழிவுகள் என 4 வகைகளாக தரம்பிரித்து வழங்க வேண்டும்.
இது தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் 31-ஆவது வாா்டு கணேசபுரம் பகுதியில் வீடுகளில் குப்பைகளை தரம்பிரித்து மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களிடம் முறையாக வழங்கிய குடும்பங்களை அடையாளம் கண்டு அவா்களைப் பாராட்டி ஊக்குவிக்கும் வகையில், மாநகராட்சி சாா்பில் சிறப்பு அங்கீகார ஒட்டுவில்லைகள் அவா்களது வீடுகளின் கதவுகளில் ஒட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டனா்.
Advertisement
Advertisement