கடத்தி வரப்பட்ட இளைஞர் ஓமலூரில் மீட்பு
மேட்டூரில் இருந்து இளைஞரைக் கடத்தி வந்து காரை ஓமலூர் அருகே போலீஸார் சுற்றிவளைத்துப் பிடித்து இளைஞரை மீட்டனர்.
மேட்டூரில் இருந்து இளைஞரைக் கடத்தி வந்து காரை ஓமலூர் அருகே போலீஸார் சுற்றிவளைத்துப் பிடித்து இளைஞரை மீட்டனர்.
மேட்டூர் பகுதியைச் சேர்ந்த மகேஷ் (33) என்பவரை 5பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திச்செல்வதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மேட்டூர் டி.எஸ்.பி. ரவிக்குமார் தலைமையிலான போலீஸார் இளைஞரைக் கடத்திச் சென்ற காரை துரத்தி வந்தனர். ஓமலூர் பேருந்து நிலையம் அருகே அந்தக் கார் வந்தபோது போலீஸார் காரைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர். பின்னர் கடத்தப்பட்ட இளைஞரை மீட்டதுடன், கடத்தலில் ஈடுபட்டதாக 5 பேரையும் பிடித்துச் சென்று போலீஸார் விசாரித்தனர். இதுகுறித்து போலீஸார் கூறியது:
மேட்டூரைச் சேர்ந்தவர் மகேஷ். இவர் புதுச்சேரியைச் சேர்ந்த துர்காதேவி என்பவரிடம் ரூ.3 லட்சத்துக்கு வெங்காயம் வாங்கினார். இதற்குக் காசோலை கொடுத்துள்ளார். அந்தக் காசோலை பணமில்லாமல் திரும்பி வந்துவிட்டது. இதையடுத்து, துர்காதேவியின் சகோதரர் நாகேந்திரன் (31), நண்பர்கள் மனோகரன் (31), யுவராஜ் (24), வேடசந்தூர் ஜெயமாணிக்கம் (29), திருச்சி தயாநிதி (30) ஆகியோர் மேட்டூர் வந்தனர்.
Advertisement
Advertisement
அவர்கள், மகேஷை காவல் நிலையத்துக்கு செல்வதற்காகக் காரில் ஏற்றியுள்ளனர். ஆனால், காவல் நிலையம் செல்லாமல் புதுச்சேரிக்கு கொண்டு செல்ல முயன்றதாகத் தெரிகிறது. இதுகுறித்து மகேஷின் உறவினர் திரவியம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, அரைமணி நேரத்தில் விரைந்து செயல்பட்டு மகேஷ் மீட்கப்பட்டார் என்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.