FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தாரமங்கலம் பகுதியில் திருநங்கையருக்கு 68 வீடுகள்

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் திருநங்கையருக்கென கட்டப்பட்ட வீடுகள் திங்கள்கிழமை அவர்களிடம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஒப்படைக்கப்பட்டன.

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் திருநங்கையருக்கென கட்டப்பட்ட வீடுகள் திங்கள்கிழமை அவர்களிடம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஒப்படைக்கப்பட்டன.

சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களாகக் கருதப்படும் திருநங்கையரின் நலனுக்காக, சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே டி.கோனகாபாடி கிராமத்தில் தமிழக அரசு, கடந்த 2013-ம் ஆண்டு நிலத்தை ஒதுக்கீடு செய்தது. மொத்தம் 71 திருநங்கைகளுக்கு இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் சார்பில் தலா ரூ.1.61 லட்சம் மதிப்பில் வீடுகள் கட்டும் பணிகளும் உடனடியாக தொடங்கப்பட்டன. இதனிடையே 3 திருநங்கைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்த நிலையில் 68 வீடுகள்,கடந்த 2014-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டன.

வீடுகளில் மின்சாரம், சாக்கடை வடிகால் மற்றும் குடிநீர் வசதிகள் செய்யப்படாத நிலையில் வீடுகள் ஒப்படைக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டாகியும், தங்களுக்கான வீடுகள் ஒப்படைக்கப்படாமல் இருப்பது குறித்து, திருநங்கைகள் மாவட்ட ஆட்சியரிடம் கடந்த வாரம் மனு அளித்தனர்.

Advertisement

Advertisement

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட இடத்தில் உடனடியாக மின்சார இணைப்பு வழங்கப்பட்டது. மேலும், சாக்கடை வடிகால் அமைக்கப்பட்டதோடு, தண்ணீர்த் தேவைக்காக ஆழ்துளைக் கிணறும் அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திருநங்கைகளுக்கு வீடுகள் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

டி.கோனகாபாடி ஊராட்சி மன்றத் தலைவர் நிரஞ்சனா மோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேட்டூர் சார் ஆட்சியர் அனீஸ் சேகர், 68 திருநங்கைகளிடம் வீடுகளின் சாவிகளை வழங்கினார்.

சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் கோ.கவிதா, தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் எல்.ஏழுமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.புதிய வீடுகள் வழங்கப்பட்டது குறித்து திருநங்கைகள் கூறியது:

வீடு வாடகைக்குப் பிடிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்த நிலையில், தமிழக அரசு எங்களுக்கென வீடுகளை நல்ல முறையில் கட்டித் தந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தற்போது

வழங்கப்பட்டுள்ள குடியிருப்புப் பகுதியில், சுற்றுச்சுவர் அமைத்துத் தர வேண்டும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். மேலும், 168 திருநங்கைகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்ற கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments