கோயில்களில் ஆடிக் கிருத்திகை விழா
சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் ஆடிக்கிருத்திகை விழா ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் ஆடிக்கிருத்திகை விழா ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
ஆடிக் கிருத்திகையையொட்டி அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள ஆறுமுகவேலன் சுவாமிக்கு திருநீறு, சந்தனம், பன்னீர் மற்றும் 108 லிட்டர் பால் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரமும் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. விழாக் குழுவினர் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு சென்றனர்.
சந்தைபேட்டை செல்லியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள பாலமுருகன் சுவாமிக்கு 108 லிட்டர் பால் மற்றும் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டு சென்றனர். இதே போல் திருச்செங்கோடு சாலையில் உள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி, அக்கமாபேட்டை முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஆத்தூரில்...
ஆத்தூர் பகுதியில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
ஆத்தூர் வெள்ளப் பிள்ளையார் திருக்கோயிலில் முருகப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஆத்தூர் அக்ரஹாரத்தில் உள்ள மூலப் பிள்ளையார் திருக்கோயிலில் பாலசுப்ரமணியர் சுவாமிக்கு சிறப்பு யாகம், அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமிக்கு ஆராதனை நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.