FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வாழப்பாடி இலக்கியப் பேரவையில் சிவாஜி கணேசன் நடிப்பாற்றல் கருத்தரங்கு

வாழப்பாடி இலக்கியப் பேரவையின் 447-ஆவது கூட்டத்தில், மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் நடிப்பாற்றலில் காதல்,  வீரம், பாசம் குறித்த கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது. 

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:

வாழப்பாடி இலக்கியப் பேரவையின் 447-ஆவது கூட்டத்தில், மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் நடிப்பாற்றலில் காதல்,  வீரம், பாசம் குறித்த கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது. 
இலக்கியப் பேரவையின் கூட்டத்துக்கு ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் முருகா.வரதராஜன் தலைமை வகித்தார்.  தாளாளர் செந்தில்குமார் வரவேற்றார். செயலாளர் சிவ.எம்கோ முன்னிலை வகித்தார். கூட்டத்தில்,  நடிகர் சிவாஜிகணேசன் நடிப்பாற்றலில் அதிக மக்களின் மனதில் நிலைத்திருப்பது காதலா? வீரமா? பாசமா? என்பது குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. ஆடிட்டர் ஆர். குப்பமுத்து, திருக்குறள் ஆய்வறிஞர் சுப்பிரமணியன், ஆசிரியர் சிவ.எம்கோ, கவிஞர்மன்னன் ஆகியோரும் கருத்துரை வழங்கினர். கூட்டத்தில், ஆப்பிள் கூட்டமைப்பு ஜவஹர், என்.கே.எஸ். சரவணன், மதியழகன், பாலுசாமி, தமிழ்சிறகு செந்தில்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments