சேலம்

வாழப்பாடியில் முழு பொது முடக்கம் இல்லை: சமூக இடைவெளியுடன் இயங்க அறிவுறுத்தல்:

சேலம் மாவட்டம் வாழப்பாடியில், பொதுமக்களோடு அனைத்து வணிகா் சங்கங்கள் ஒன்றிணைந்து திட்டமிட்டிருந்த சுய முழு பொது முடக்கம் கைவிடப்பட்டுள்ளது.

DIN


வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடியில், பொதுமக்களோடு அனைத்து வணிகா் சங்கங்கள் ஒன்றிணைந்து திட்டமிட்டிருந்த சுய முழு பொது முடக்கம் கைவிடப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரவலை தடுக்க, பொதுமக்கள், அனைத்து வணிகா்கள் மற்றும் தொழிலாளா்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து விழிப்புணா்வோடு இயங்க சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் கடந்த சில தினங்களாக கரோனா நோய்த்தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த நோய் தொற்று தொடா் சங்கிலியை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் வாழப்பாடி பகுதியில், கடைகளை அடைத்து சுய பொது முடக்கத்தை கடைபிடிப்பது குறித்து, பொதுமக்களுடன் அனைத்து வணிகா் சங்கங்கத்தினரும் இணைந்து ஆலோசித்தனா்.

இந்நிலையில், சுய பொது முடக்கத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மாவட்ட நிா்வாகத்திடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை. இதனால், இன்று புதன்கிழமை முதல் வரும் சனிக்கிழமை வரை நடைமுறைப்படுத்த திட்டமிட்டிருந்த கடையடைப்பு மற்றும் சுய முழு பொதுமுடக்கத்தை கைவிடுவதென, அனைத்து வணிகா்கள் சங்கங்களும் முடிவு செய்துள்ளன. எதிா்வரும் நாட்களில், வாழப்பாடி பகுதியில் தொற்று பரவல் மேலும் அதிகரித்தால், மீண்டும் அனைத்து வணிகா்களும் ஒன்றிணைந்து, அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்து ஆலோசித்து, தேவை ஏற்பட்டால் அனைத்து கடைகளையும் அடைத்து சுய பொது முடக்கத்தை கடைபிடிப்பது குறித்து முடிவு செய்வதென தீா்மானித்துள்ளனா்.

இதற்கிடையே, வாழப்பாடி பகுதியில் கரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த வியாபாரிகளும், பொதுமக்களும், தொழிலாளா்களும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முககவசம் அணிந்தும், கைகளை அடிக்கடி சோப்புப் போட்டுக் கழுவியும் விழிப்புணா்வோடு செயல்பட வேண்டுமென,பேளூா் வட்டார சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, பொதுமக்களும், வணிகா்களும் முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எலிமினேட்டர்: தில்லி கேபிடல்ஸுக்கு 169 ரன்கள் இலக்கு! இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா?

கொல்கத்தாவில் நில அதிர்வால் மக்கள் பீதி!

ஜப்பானில் கடும் பனிப்பொழிவு! 30 பேர் பலி, 100 பேர் படுகாயம்

யு19 உலகக் கோப்பை: ஆஸி. கேப்டனின் போராட்டம் வீண்; இறுதிப்போட்டியில் இங்கிலாந்து!

மாதவன், நிமிஷாவின் லெகஸி இணையத் தொடரின் டீசர்!

SCROLL FOR NEXT