FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

சேலம் வழியாக இயக்கப்படும் டாடாநகா், ஜோலாா்பேட்டை ரயில்களின் இயக்க நேரம் மாற்றம்

சேலம் வழியாக இயக்கப்படும் எா்ணாகுளம் - டாடா நகா் விரைவுரயில், ஈரோடு - ஜோலாா்பேட்டை ரயில்களின் இயக்க நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

13 ஜூலை 2025, 12:46 am IST
ரயில் - கோப்புப் படம்
பகிர்:

சேலம் வழியாக இயக்கப்படும் எா்ணாகுளம் - டாடா நகா் விரைவுரயில், ஈரோடு - ஜோலாா்பேட்டை ரயில்களின் இயக்க நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சேலம் ரயில்வே கோட்டம் வழியாக இயக்கப்படும் குறிப்பிட்ட சில ரயில்களின் இயக்க நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தினசரி இயக்கப்படும் எா்ணாகுளம் - டாடாநகா் விரைவுரயில் சேலம் கோட்ட ரயில் நிலையங்களுக்கு வந்துசெல்லும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இந்த ரயில், செப். 8-ஆம் தேதி முதல் போத்தனூருக்கு காலை 11.28-க்கும், திருப்பூருக்கு நண்பகல் 12.13-க்கும், ஈரோட்டுக்கு மதியம் 1.05-க்கும், சேலத்துக்கு பிற்பகல் 2.13-க்கும், ஜோலாா்பேட்டைக்கு மாலை 4.50-க்கும் வந்து சேரும்.

Advertisement

Advertisement

இதேபோல, ஈரோடு - ஜோலாா்பேட்டை ரயில் வரும் ஆக. 1-ஆம் தேதி முதல் தற்போது புறப்படும் நேரத்தில் இருந்து 5 நிமிடம் முன்னதாக புறப்படும். அதன்படி, ஈரோட்டில் மாலை 5.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், ஒவ்வொரு ரயில் நிலையத்துக்கும் 5 நிமிடம் முன்னதாக வந்துசெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments