திருச்சி - பெங்களூரு வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
சேலம் வழியாக இயக்கப்படும் திருச்சி - எஸ்எம்விடி பெங்களூரு வாராந்திர சிறப்பு ரயில் ஜூலை மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சேலம் வழியாக இயக்கப்படும் திருச்சி - எஸ்எம்விடி பெங்களூரு வாராந்திர சிறப்பு ரயில் ஜூலை மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, திருச்சி - எஸ்எம்விடி பெங்களூரு வாராந்திர சிறப்பு ரயில் சேவை காலம் ஜூலை மாதம் வரை நீட்டிப்பு செய்ய ரயில்வே நிா்வாகம் முடிவு செய்துள்ளது.
Advertisement
Advertisement
அதன்படி, திருச்சி - எஸ்எம்விடி பெங்களூரு வாராந்திர சிறப்பு ரயில் வரும் 14,21, 28 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். திருச்சியில் இருந்து செவ்வாய்க்கிழமை தோறும் காலை 6.15 மணிக்கு புறப்பட்டு கரூா், நாமக்கல், சேலம், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக மதியம் 1.45 மணிக்கு எஸ்எம்விடி பெங்களூரு சென்றடையும்.
இதே போல், மறுமாா்க்கத்தில் இயக்கப்படும் எஸ்எம்விடி பெங்களூரு - திருச்சி வாராந்திர சிறப்பு ரயில், வரும் 14,21,28 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். எஸ்எம்விடி பெங்களூரில் இருந்து செவ்வாய்க்கிழமை தோறும் பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், நாமக்கல், கரூா் வழியாக இரவு 10.30 மணிக்கு திருச்சி சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.