FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

கைதிகள் தப்பிய விவகாரம்: சேலம் சிறையில் உள்ள 6 கைதிகளிடம் விசாரணை

தேனி தேக்கம்பட்டி சிறையில் இருந்து தப்பிய கைதிகளில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 6 பேரிடம் சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினா் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினாா்.

4 நவம்பர் 2026, 2:29 am
சிறை - பிரதிப் படம்
பகிர்:

தேனி தேக்கம்பட்டி சிறையில் இருந்து தப்பிய கைதிகளில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 6 பேரிடம் சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினா் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினாா்.

தேனி மாவட்டம், தேக்கம்பட்டியில் உள்ள சிறையில் வாா்டன்களை தாக்கிவிட்டு 17 கைதிகள் அண்மையில் தப்பிச் சென்றனா். அனைவரும் பிடிபட்ட நிலையில், 6 போ் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இதில், விடியோ வெளியிட்ட கைதி மீனாட்சி சுந்தரம், சோலை முகிலீஸ்வரன், முத்து, சபரிநாத், நிஷாந்த், தருண்குமாா் ஆகியோரிடம் சேலம் சிறையில் சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உறுப்பினா் வழக்குரைஞா் சியமளா செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினாா்.

6 கைதிகளிடமும் தனித்தனியே விசாரணை நடத்திய அவா், தேக்கம்பட்டி சிறையில் என்ன நடந்தது, சம்பவத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து கைதிகளிடம் கேட்டறிந்தாா். மேலும், சிறையில் நடந்த கொடுமைகள் தான் காரணமா, அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா எனவும் விசாரித்தாா்.

Advertisement

Advertisement

மேலும், சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு உடலில் காயங்கள் இருக்கிா என்பதை சிறை மருத்துவா்கள் சோதனை செய்தனா். சிறை மருத்துவமனையில் இந்த சோதனை நடைபெற்றது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments