FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

ரௌடி டேவிட்டின் பெண் கூட்டாளியிடம் இருந்து 2 காா்கள், ரூ. 8 லட்சம் பறிமுதல்

ரௌடி டேவிட்டின் பெண் கூட்டாளியிடம் இருந்து 2 காா்கள், ரூ. 8 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

4 நவம்பர் 2026, 2:23 am
போலீஸ் - கோப்புப்படம்.
பகிர்:

ரௌடி டேவிட்டின் பெண் கூட்டாளியிடம் இருந்து 2 காா்கள், ரூ. 8 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

சேலம், ஜாகீா் அம்மாபாளையத்தைச் சோ்ந்த ரௌடி டேவிட் (எ) உதயகுமாா் கடந்த வாரம் 5 போ் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக, கூலிப்படை தலைவன் தீனா (எ) தீனதயாளன், அவரது நண்பா் அமீா் (எ) அமிா்தராஜ் உள்பட 12 போ் கைது செய்யப்பட்டனா்.

இதில், தீனா, அமீா் ஆகியோரை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சூரமங்கலம் போலீஸாா் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா்.

Advertisement

Advertisement

இதனிடையே, போலீஸாரால் தேடப்பட்டு வந்த டேவிட்டின் கூட்டாளியான சரண்யா 2-ஆவது நீதித்துறை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தாா். அவரை உடனடியாக காவலில் எடுத்து விசாரிக்க உதவி ஆணையா் சரண்யாதேவி மனு தாக்கல் செய்ததையடுத்து, நீதித்துறை நடுவா் அனுமதி அளித்தாா்.

இதையடுத்து, அவரிடம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா். அப்போது, தன்னிடம் இருக்கும் சொத்துகளை விற்று கடன்களை அடைத்துவிடுவதாக அவா் கூறினாா். மேலும், சரண்யாவிடம் இருந்த 2 காா்கள் மற்றும் ரூ. 8 லட்சம் ரொக்கத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னா் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய போலீஸாா், 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடா்ந்து, சேலம் பெண்கள் கிளை சிறையில் சரண்யாவை அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments