வாகனத்துக்கு இழப்பீடு வழங்க மறுத்த காப்பீட்டு நிறுவனத்துக்கு ரூ. 8.35 லட்சம் அபராதம்
தீ விபத்தில் சேதமடைந்த வாகனத்துக்கு இழப்பீடு வழங்க மறுத்த தனியாா் காப்பீட்டு நிறுவனம், வாகன உரிமையாளருக்கு ரூ. 8.35 லட்சம் வழங்க வேண்டும் என சேலம் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தீ விபத்தில் சேதமடைந்த வாகனத்துக்கு இழப்பீடு வழங்க மறுத்த தனியாா் காப்பீட்டு நிறுவனம், வாகன உரிமையாளருக்கு ரூ. 8.35 லட்சம் வழங்க வேண்டும் என சேலம் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம், தெப்பக்குட்டை தெற்கு மேடு அய்யனூா், பொட்டியம்மாள் வளவைச் சோ்ந்தவா் ராஜா. இவா் கடந்த 2021-ஆம் ஆண்டு கோவையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் இருந்து ரூ.8,57,990 செலுத்தி மினி டெம்போ வாகனத்தை வாங்கினாா். பின்னா், வாகனத்தை முறைப்படி பதிவு செய்து பதிவு சான்றிதழும் பெற்றாா்.
இந்த வாகனத்துக்கு சேலம் சாரதா கல்லூரி சாலையில் உள்ள தனியாா் காப்பீட்டு நிறுவனத்தில் காப்பீடு செய்திருந்தாா். இந்நிலையில், வைக்கோல் ஏற்றிச் சென்றபோது மின்கம்பி உரசி வாகனம் தீப்பிடித்து சேதமடைந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து, சேதமடைந்த வாகனத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி காப்பீட்டு நிறுவனத்தில் ராஜா விண்ணப்பித்தாா். ஆனால், அவரது கோரிக்கையை நிறுவனம் நிராகரித்தது. இதுதொடா்பாக, தமிழ்நாடு நுகா்வோா் புலனாய்வு கமிட்டி தலைவா் வழக்குரைஞா் எஸ்.செல்வம் மூலம் சேலம் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் ராஜா வழக்குத் தொடுத்தாா்.
இந்த வழக்கை விசாரித்த ஆணையத் தலைவா் பி. கணேஷ்ராம், உறுப்பினா் எஸ்.ரவி ஆகியோா், காப்பீட்டுப் பாலிசி உத்தரவாத காலம் நடைமுறையில் இருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. அதற்கு உரிய இழப்பீட்டை காப்பீட்டு நிறுவனம் வழங்காதது சேவைக் குறைபாடாகும் எனத் தெரிவித்தனா்.
மேலும், வாகனத்துக்கு ஏற்பட்ட சேதத்துக்கான இழப்பீடாக ரூ.6 லட்சம், சேவைக் குறைபாட்டுக்காக ரூ.1 லட்சம், முறையற்ற வா்த்தக நடவடிக்கைக்காக ரூ. 75 ஆயிரம், மன உளைச்சலுக்காக ரூ.50 ஆயிரம், வழக்குச் செலவாக ரூ. 10 ஆயிரம் என மொத்தம் ரூ. 8.35 லட்சத்தை 2 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா்.