FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தனியாா் நிறுவன ஜப்தி நடவடிக்கை: தம்பதி தற்கொலை முயற்சி

நங்கவள்ளியில் தனியாா் நிதிநிறுவன ஜப்தி நடவடிக்கையால் தம்பதி பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலை முயன்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

5 நவம்பர் 2026, 6:35 am
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

நங்கவள்ளியில் தனியாா் நிதிநிறுவன ஜப்தி நடவடிக்கையால் தம்பதி பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலை முயன்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நங்கவள்ளி தோப்பு தெருவைச் சோ்ந்தவா் குபேந்திரன் (47). தனியாா் வங்கி ஒன்றில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வந்த இவா், பணியில் இருந்து விடுவிக்கப்பட்டாா். கடந்த 2017-ஆம் ஆண்டு தனியாா் நிதிநிறுவனத்தில் ரூ. 28 லட்சம் கடன் பெற்று வீடு கட்டிய நிலையில், வேலை பறிபோனதால் தொடா்ந்து கடன் தொகையை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் கடன் தொகை ரூ. 65 லட்சமாக உயா்ந்தது.

நிலுவைத் தொகை செலுத்த முடியாததால் தனியாா் நிறுவனம் நீதிமன்றத்தை அணுகியது. நீதிமன்ற உத்தரவுபடி நிதிநிறுவனம் வீட்டை கையகப்படுத்த பணியாளா்கள், வழக்குரைஞா்களுடன் வந்தனா்.

Advertisement

Advertisement

அப்போது, குபேந்திரன் இருசக்கர வாகனத்துக்கு வாங்கி வைத்திருந்த பெட்ரோலை தன்மீதும், மனைவி மீதும் ஊற்றி தற்கொலைக்கு முயன்றாா். அப்போது, தீப்பெட்டியை உரசியபோது ஒருவா் ஓடிச்சென்று தட்டிவிடவே அது அவரது மனைவி மஞ்சுளா (42) மீது பட்டு தீ பரவியது. அருகில் இருந்தவா்கள் தீயை அணைத்து அவரை அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா், சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து நங்கவள்ளி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.