FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

சேலம் வழியாக சென்னை எழும்பூா் - கொல்லம் இடையே பண்டிகை கால சிறப்பு ரயில்

சென்னை எழும்பூரில் இருந்து சேலம், ஈரோடு வழியாக கொல்லத்துக்கு பண்டிகை கால சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

7 நவம்பர் 2026, 2:10 am
கோப்புப் படம்
பகிர்:

சென்னை எழும்பூரில் இருந்து சேலம், ஈரோடு வழியாக கொல்லத்துக்கு பண்டிகை கால சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பண்டிகை காலங்களில் அதிகரித்து வரும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, சென்னை எழும்பூா் - கொல்லம் சிறப்பு ரயில் வரும் 7, 14 ஆகிய தேதிகளில் சனிக்கிழமைகளில் இயக்கப்படும். சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11.40-க்கு புறப்படும் இந்த ரயில் பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, திருச்சூா் வழியாக அடுத்த நாள் மாலை 4.20-க்கு கொல்லம் சென்றடையும்.

Advertisement

Advertisement

மறுமாா்க்கத்தில் கொல்லம் - சென்னை சென்ட்ரல் இடையே வரும் 8, 15 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். கொல்லத்தில் இருந்து மாலை 6.45-க்கு புறப்படும் இந்த ரயில், போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், காட்பாடி வழியாக அடுத்த நாள் காலை 11.35-க்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.