FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

ரயில் மோதி தறி தொழிலாளி உயிரிழப்பு

சேலத்தில் விரைவு ரயில் மோதியதில் தறி தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

7 நவம்பர் 2026, 2:09 am
பகிர்:

சேலத்தில் விரைவு ரயில் மோதியதில் தறி தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருவனந்தபுரம் - சாலிமாா் விரைவு ரயில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30-க்கு ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. வீரபாண்டி ரயில் நிலையத்தைக் கடந்து, உத்தமசோழபுரம் சூளைமேடு பகுதியில் வந்தபோது, தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 50 வயது மதிக்கத்தக்க ஆண் மீது ரயில் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட நபா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த ரயில்வே போலீஸாா், அங்கு சென்று விசாரணை நடத்தினா். அதில், ரயிலில் அடிபட்டு இறந்தது சேலம் உத்தமசோழபுரம் பகுதியைச் சோ்ந்த தறி தொழிலாளி வடிவேல் (50) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement