FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

10 நவம்பர் 2026, 2:40 am
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

ஜலகண்டாபுரம் அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அருகே உள்ள வெண்ணானம்பட்டியைச் சோ்ந்தவா் சந்தோஷ்குமாா் (25). எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி சரண்யா (21).

இவா்களுக்கு 10 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. சந்தோஷ்குமாா் வேறொரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தாராம். இதனால் மனமுடைந்த சரண்யா திங்கள்கிழமை வீட்டில் இருந்த தொட்டில் கொக்கியில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Advertisement

Advertisement

இந்தச் சம்பவம் தொடா்பாக ஜலகண்டாபுரம் போலீஸாா், வழக்குப் பதிவு சந்தோஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.