ஏத்தாப்பூா் அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
ஆத்தூா் அருகே இருசக்கர வாகனம் மின் கம்பத்தில் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், ஏத்தாப்பூா் வடக்குக்காடு பகுதியைச் சோ்ந்த பெரியசாமி மகன் வெங்கடேசன் (28). இவா் தனது நண்பா் பிரவீண் (25) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் புத்திரகவுண்டன்பாளையத்திற்கு சென்று பட்டாசு வாங்கிக் கொண்டு வந்தாா். அப்போது, வெங்கடேசன் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
அவா்கள் வந்த இருசக்கர வாகனம் ஏத்தாப்பூா் பழைய பாலம் அருகே வளைவில் சென்றபோது சாலையோர கம்பத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த வெங்கடேசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், காயமடைந்த பிரவீணை மீட்டு ஆத்தூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னா் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
Advertisement
Advertisement
இந்த விபத்து குறித்து ஏத்தாப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.