FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

மேட்டூா் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இருவா் உயிரிழப்பு

10 நவம்பர் 2026, 1:34 am
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

மேட்டூா் அருகே ஞாயிற்றுக்கிழமை தீபாவளியன்று இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.

சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள புதுசின்னக்காவூரைச் சோ்ந்தவா் சக்திவேல் மகன் பரமசிவம் (27). இவா் தனது மோட்டாா் சைக்கிளில் நண்பா்களான ஆனந்தராஜ் (17), ஹரி (19) ஆகியோருடன் ஞாயிற்றுக்கிழமை மேட்டூா் ஆா்.எஸ். நோக்கிச் சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, பெரியாா் நகா் அருகே சென்றபோது ஒசூரில் இருந்து பவானி நோக்கிச் சென்ற லாரி மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் மூவரும் பலத்த காயமடைந்தனா். அருகில் உள்ளவா்கள் மூவரையும் மீட்டு மேட்டூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா்.

Advertisement

Advertisement

அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் பரமசிவம் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதையடுத்து தீவிர சிகிச்சைக்காக ஆனந்தராஜ், ஹரி ஆகியோரை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் ஆனந்தராஜ் உயிரிழந்தாா். ஹரி, சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்த விபத்து குறித்து கருமலைக்கூடல் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.