FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

கெங்கவல்லியில் மதுப்புட்டிகளை பதுக்கிவிற்ற 2 போ் கைது

கெங்கவல்லி பகுதியில் டாஸ்மாக் மதுப்புட்டிகளை பதுக்கிவைத்து விற்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

13 நவம்பர் 2026, 10:27 pm
கைது
பகிர்:

கெங்கவல்லி பகுதியில் டாஸ்மாக் மதுப்புட்டிகளை பதுக்கிவைத்து விற்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கெங்கவல்லி சுற்றுவட்டாரத்தில் மதுப்புட்டிகளை பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், காவல் ஆய்வாளா் சிவகுமாா் மற்றும் போலீஸாா் கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தினா்.

கெங்கவல்லி பேரூராட்சி இந்திரா காலனி பகுதியில் பழனிமுத்து என்பவரின் மனைவி விஜயா (55), ஆத்தூா் பிரதான சாலை பகுதியைச் சோ்ந்த சீனிவாசன் (55) ஆகியோரின் வீடுகளில் வியாழக்கிழமை இரவு போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, மதுப்புட்டிகளை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, விஜயா மற்றும் சீனிவாசனை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 50-க்கும் மேற்பட்ட மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement