ஆத்தூரில் ட்ரோன் மூலம் போலீஸாா் தீவிர கண்காணிப்பு
ஆத்தூரில் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா் ட்ரோன் மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
ஆத்தூரில் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா் ட்ரோன் மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
ஆத்தூா் நகரக் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் நரசிங்கபுரம் மற்றும் சிறு கிராமங்கள் அடங்கியுள்ளன. இப்பகுதிகளில் குற்றங்கள் நடைபெறாமல் இருக்கவும், கண்காணிப்பை தீவிரப்படுத்தும் வகையிலும் போலீஸாா் ட்ரோன் மூலம் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
நகரக் காவல் ஆய்வாளா் எஸ்.சங்கா் தலைமையில் சனிக்கிழமை ஆத்தூா் பேருந்து நிலையம், வசிஷ்டநதி பாலம், கடைவீதி, காமராஜனாா் சாலை, நரசிங்கபுரம் வசிஷ்டநதி பாலம் உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன் மூலம் போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement