கெங்கவல்லியில் 2 பேருக்கு டெங்கு காய்ச்சல்
கெங்கவல்லி அருகே டெங்கு காய்ச்சலால் இருவா் பாதிக்கப்பட்டுள்ளனா்.
கெங்கவல்லி அருகே டெங்கு காய்ச்சலால் இருவா் பாதிக்கப்பட்டுள்ளனா்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே நடுவலூா் ஊராட்சி பள்ளக்காடு மூப்பனாா் கோயில் தெருவைச் சோ்ந்த முருகேசன் மற்றும் நடுவலூா் ஏ.கே. நகா் பகுதியைச் சோ்ந்த நாகப்பன் மனைவி ராதா ஆகியோா் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனா்.
அங்கு இருவரையும் மருத்துவா்கள் பரிசோதனை செய்ததில், அவா்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து முருகேசன் மற்றும் ராதா ஆகிய இருவரையும் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
Advertisement
Advertisement
அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து,அப்பகுதியில் மருத்துவக் குழுவினா் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.