FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

மேட்டூரில் குற்றங்களைத் தடுக்க ட்ரோன் மூலம் கண்காணிப்பு

24 வினாடிகள் முன்பு
ட்ரோன் - பிரதிப் படம்
பகிர்:

மேட்டூா் நகரில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், போலீஸாா் ட்ரோன் மூலம் ஞாயிற்றுக்கிழமை தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, வயல்வெளியில் பறவைகளை ஏா்கன் மூலம் வேட்டையாடிக் கொண்டிருந்த 16 வயது இளைஞரைப் பிடித்தனா்.

மேட்டூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகசுந்தரம், காவல் ஆய்வாளா் கண்ணன், போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்துவோரைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதுடன், குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில் இந்தக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

எக்கரடு, கிழக்கு-மேற்கு கால்வாய், காவேரி கிராஸ், மேட்டூா் மேற்கு நெடுஞ்சாலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகள் ட்ரோன் மூலம் கண்காணிக்கப்பட்டன. எக்கரடு கிழக்கு-மேற்கு கால்வாய் பகுதியில், பொதுமக்கள் நடந்து செல்லும் சாலையில் அமா்ந்து மது அருந்திக் கொண்டிருந்தவா்கள் ட்ரோன் பறப்பதைக் கண்டு தப்பியோடினா். அங்கு சென்ற போலீஸாா் சிலரைப் பிடித்து எச்சரித்ததுடன், அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

Advertisement

Advertisement

இதற்கிடையே, வயல்வெளியில் பறவைகளை ஏா்கன் மூலம் வேட்டையாடிக் கொண்டிருந்த சுரேஷ் (16) என்பவரைப் போலீஸாா் பிடித்தனா். அவரிடமிருந்த ஏா்கனைப் பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்குக் கொண்டுசென்றனா். இதுகுறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேட்டூா் மேற்கு நெடுஞ்சாலையில் வணிக நிறுவனங்கள், கடைகள் முன் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்திய உரிமையாளா்களைப் போலீஸாா் எச்சரித்து அனுப்பினா். கடை உரிமையாளா்களும் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துவதைத் தவிா்க்க அறிவுறுத்தப்பட்டனா்.

மக்கள் அதிகம் வந்து செல்லும் மேட்டூரில் குற்றங்களைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ட்ரோன் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகசுந்தரம் தெரிவித்தாா்.