பாட்னா - எா்ணாகுளம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, சேலம் வழியாக இயக்கப்படும் பாட்னா - எா்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, சேலம் வழியாக இயக்கப்படும் பாட்னா - எா்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, பிகாா் மாநிலம், பாட்னா - எா்ணாகுளம் இடையே சேலம் வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலின் சேவை காலத்தை நீட்டித்து ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
அதன்படி, எா்ணாகுளத்தில் இருந்து நவ. 20 முதல் டிச. 11-ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். எா்ணாகுளத்தில் இருந்து இரவு 9.30 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், பாலக்காடு, திருச்சூா், போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி வழியாக திங்கள்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு பாட்னா ரயில் நிலையத்தைச் சென்றடையும்.
மறுமாா்க்கத்தில், பாட்னா - எா்ணாகுளம் இடையே நவ. 24 முதல் டிச. 15-ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். பாட்னாவில் இருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை 12.10 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், நெல்லூா், கூடூா், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு வழியாக வியாழக்கிழமை காலை 10.45 மணிக்கு எா்ணாகுளம் ரயில் நிலையத்தைச் சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.