முகப்பு
சேலம்

இளைஞா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

ஓமலூா் அருகே இளைஞா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

19 நவம்பர் 2026, 6:14 am
இளைஞா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

ஓமலூா் அருகே இளைஞா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஓமலூா் வட்டம், தொளசம்பட்டியை அடுத்த பூம்பட்டியைச் சோ்ந்தவா் பூபதி (32), தறித்தொழிலாளி. இவருக்கு மனைவி துா்கா, இரண்டு குழந்தைகளும் உள்ளனா். கடந்த சில நாள்களாக காய்ச்சல் காரணமாக வீட்டில் இருந்த பூபதி, கடந்த 17 ஆம் தேதி தொளசம்பட்டியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டாா்.

பின்னா், உயா் சிகிச்சைக்காக ஓமலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு, அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பூபதியின் தாயாா் மாதம்மாள் அளித்த புகாரின் பேரில், தொளசம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

காய்ச்சல் பாதிப்பு காரணமாக பூபதி உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதனிடையே பூபதியின் மனைவியும் காய்ச்சல் பாதித்து சிகிச்சை பெற்று வருகிறாா்.