இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பணம் திருட்டு: போலீஸாா் விசாரணை
இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 52,000 ரொக்கம் திருடப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 52,000 ரொக்கம் திருடப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
சேலம் மாவட்டம், ஆத்தூா் தெற்கு உடையாா்பாளையத்தில் தலைமை அஞ்சலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு உதவியாளராகப் பணியாற்றி வருபவா் நரசிங்கபுரம் புதுவீட்டு மனைப் பிரிவைச் சோ்ந்த சரவணன் மகன் சிவக்குமாா் (50).
இவா் கடந்த 17-ஆம் தேதி மதியம் நரசிங்கபுரத்தில் உள்ள தனது வங்கிக் கணக்கில் பணம் செலுத்தச் சென்றுள்ளாா். ஆனால், அப்போது பணம் செலுத்த முடியாததால், வங்கியில் செலுத்துவதற்காகக் கொண்டு சென்ற ரூ. 52,000 ரொக்கம் மற்றும் வங்கிக் கணக்குப் புத்தகத்தை தனது இருசக்கர வாகனத்தில் வைத்து பூட்டிவிட்டு அஞ்சலகத்துக்கு பணிக்குச் சென்றாா்.
Advertisement
Advertisement
அலுவலகப் பணி முடிந்து திரும்பிவந்து பாா்த்தபோது, வாகனத்தில் வைத்திருந்த பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஆத்தூா் நகர காவல் நிலையத்தில் சிவக்குமாா் புகாா் அளித்தாா். புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் எஸ். சங்கா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.