முகப்பு
சேலம்

இளைஞா் தற்கொலை: போலீஸாா் விசாரணை

ஆத்தூா் அருகே மஞ்சினி கிராமத்தில் இ-சேவை மையம் நடத்தி வந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

24 வினாடிகள் முன்பு
இளைஞா் தற்கொலை: போலீஸாா் விசாரணை
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

ஆத்தூா் அருகே மஞ்சினி கிராமத்தில் இ-சேவை மையம் நடத்தி வந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த மஞ்சினி கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகத்தின் மகன் வசந்தகுமாா் (31). இவா் அதே பகுதியில் இ-சேவை மையம் மற்றும் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தாா். இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவருக்கும் தொடா்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக அப்பெண்ணின் கணவா் துரைபாண்டியன் (32), அவரது சகோதரா் பாலாஜி (41), சித்தப்பா பாண்டியன் (40) ஆகியோா் கடந்த 19 ஆம் தேதி வசந்தகுமாரைத் தகாத வாா்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனா்.

Advertisement

Advertisement

இதனால் மனமுடைந்த வசந்தகுமாா், தான் வசித்து வந்த வாடகை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இந்த நிலையில் மகனை காணவில்லை என அவரது தந்தை ஆறுமுகம் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில் வாடகை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்த வசந்தகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பிவைத்தனா். இதுகுறித்து ஆத்தூா் ஊரக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.