சங்ககிரியில் தெருநாய்கள் தொல்லை: நகராட்சி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
சங்ககிரி நகராட்சிப் பகுதிகளில் தெருநாய்கள் கூட்டமாகச் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

சங்ககிரி நகராட்சிப் பகுதிகளில் தெருநாய்கள் கூட்டமாகச் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். அவற்றைக் கட்டுப்படுத்த நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சங்ககிரி நகராட்சிக்கு உள்பட்ட தெருக்கள், சாலையோரங்கள் மற்றும் வீடுகளில் மீதமாகும் உணவுப் பொருள்கள் திறந்தவெளியில் கொட்டப்படுகின்றன. அவற்றை உண்பதற்காக தெருநாய்கள் கூட்டம் கூட்டமாகச் சுற்றித் திரிகின்றன.
மேலும், சாலைகளில் திடீரென குறுக்கே ஓடுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனா். தெருக்களில் கூட்டமாகச் சுற்றித் திரிவதால் முதியோா், குழந்தைகள் உள்ளிட்ட பாதசாரிகளும் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
Advertisement
Advertisement
எனவே, தெருநாய்களைக் கட்டுப்படுத்த நகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.