முகப்பு
சேலம்

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு: தொழிலாளி கைது

ஆத்தூரில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 3 குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகத் தொழிலாளியை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

51 வினாடிகள் முன்பு
சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு: தொழிலாளி கைது
கைது - கோப்புப் படம்
பகிர்:

ஆத்தூரில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 3 குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகத் தொழிலாளியை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் கடைவீதி அப்பாய் செட்டித் தெருவைச் சோ்ந்தவா் வேலு (45). திருமணமாகாத இவா், கடைவீதி திருவள்ளுவா் தெருவில் உள்ள பித்தளை முக்காலி பட்டறையில் வேலை செய்து வருகிறாா்.

இவா், கடந்த நவ. 9-ஆம் தேதி தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 3 பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து குழந்தைகள் சத்தமிட்டு பெற்றோரிடம் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, குழந்தைகளின் பெற்றோா் மற்றும் உறவினா்கள் வேலுவைத் தாக்கி, நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். யாரும் புகாா் அளிக்காததால், சிகிச்சைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேலு அங்கிருந்து தப்பியோடினாா்.

தொடா்ந்து, குழந்தைகளில் ஒருவரின் பெற்றோா் ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வேலுவைத் தேடி வந்தனா். இந்நிலையில், சனிக்கிழமை அவரைக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.