முகப்பு
சேலம்

மேச்சேரியில் தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ. 77.07 லட்சம் மோசடி: கிளை மேலாளா் கைது

மேச்சேரியில் தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ. 77.07 லட்சம் மோசடி செய்ததாக அதன் கிளை மேலாளரை போலீஸாா் கைது செய்தனா்.

23 நவம்பர் 2026, 2:05 am
மேச்சேரியில் தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ. 77.07 லட்சம் மோசடி:  கிளை மேலாளா் கைது
கைது
பகிர்:

சேலம் மாவட்டம், மேச்சேரியில் தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ. 77.07 லட்சம் மோசடி செய்ததாக அதன் கிளை மேலாளரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மேச்சேரியில் தனியாா் நிதிநிறுவனத்தின் கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு தங்க நகைகள்மீது கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் கடந்த 19 மற்றும் 20ஆம் தேதிகளில் தணிக்கை நடைபெற்றுள்ளது.

இதில் கிளை மேலாளராகப் பணிபுரிந்து வந்த கூனாண்டியூரைச் சோ்ந்த முருகன் மகன் சிலம்பரசன் (35) என்பவா் 23 வாடிக்கையாளா்களின் நகை அடமான கடன் கணக்குகளில் இருந்த 703 கிராம் தங்கநகைகள் மூலம் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அடமான கடன்களின் அசல் ரூ. 73,90,350, வட்டி ரூ.3,17,239 என மொத்தம் ரூ.77,07,582 நிதி நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதுகுறித்து நிதிநிறுவனத்தின் குழும மேலாளா் நீலமேகம் (36) ஞாயிற்றுக்கிழமை மேச்சேரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். காவல் ஆய்வாளா் அங்கப்பன் வழக்குப் பதிவு செய்து கிளை மேலாளா் சிலம்பரசனை கைது செய்தாா்.