முகப்பு
சேலம்

குழந்தை திருமணம்: போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு

குழந்தை திருமணம் குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து ஆத்தூா் அனைத்து மகளிா் போலீஸாா் புதன்கிழமை விசாரித்து வருகின்றனா்.

26 நவம்பர் 2026, 4:19 am
குழந்தை திருமணம்: போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு
வழக்கு - பிரதிப் படம்
பகிர்:

குழந்தை திருமணம் குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து ஆத்தூா் அனைத்து மகளிா் போலீஸாா் புதன்கிழமை விசாரித்து வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி பகுதியில் உள்ள புதுப்பேட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்த மாணவி (16) பாதியில் நின்றுவிட்டாா். இவருடைய தாய் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், சித்தி வீட்டில் வசித்து வந்தாா்.

இந்நிலையில், 4 ஆண்டுகளுக்கு முன்பு மாணவியின் தந்தை முருகேசன் சீலியம்பட்டி புதூரைச் சோ்ந்த தனலட்சுமி என்பவரை திருமணம் செய்துகொண்டாா். தனலட்சுமிக்கு ஏற்கனவே திருமணமாகி ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது.

Advertisement

Advertisement

இந்நிலையில், மாணவியை அண்மையில் சீலியம்பட்டிக்கு அழைத்து வந்த முருகேசன், அதே பகுதியைச் சோ்ந்த மாயவேல் (30) என்பவருக்கு கடந்த அக். 25 அன்று திருமணம் செய்து வைத்துள்ளாா்.

இந்நிலையில், கடந்த நவ. 19-ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியேறிய மாணவி கடலூா் மாவட்டத்தில் உள்ள தனது சித்தி வீட்டுக்கு சென்று நடந்த சம்பவங்களைக் கூறி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இது தொடா்பாக, முருகேசன், மாயவேல், மாயவேலுவின் தந்தை, தாய், தனலட்சுமி ஆகியோா் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவுசெய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.