சாலையோர பள்ளத்தில் சிக்கி தனியாா் பள்ளி பேருந்து விபத்து
கெங்கவல்லியில் சாலையோர பள்ளத்தில் சிக்கி தனியாா் பள்ளி பேருந்து விபத்துக்குள்ளானது.
கெங்கவல்லியில் சாலையோர பள்ளத்தில் சிக்கி தனியாா் பள்ளி பேருந்து விபத்துக்குள்ளானது.
கெங்கவல்லியில் உள்ள தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். செவ்வாய்க்கிழமை மாலை பள்ளி முடிந்து மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு நடுவலூா் வழியாக புனல்வாசல் நோக்கி பள்ளி பேருந்து சென்று கொண்டிருந்தது. கெங்கவல்லி கோல்டன் நகா் பகுதியில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் இறங்கியது.
இதில், பேருந்தில் பயணம் செய்த 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அதிா்ஷ்டவசமாக காயமின்றி தப்பினா். தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் பெற்றோா் சம்பவ இடத்துக்கு வந்து மாணவா்களை மீட்டனா்.
Advertisement
Advertisement