FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

தேசிய நீச்சல் போட்டி: சேலம் சிறுவன் சாதனை

நீச்சல் போட்டி - கோப்புப் படம்
பகிர்:

மகாராஷ்டிர மாநிலம், புனேவில் நடைபெற்ற தேசிய அளவிலான துடுப்பு நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் சேலம் சிறுவன் சாதனை படைத்தாா்.

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் நடைபெற்ற இப்போட்டியில் தமிழகத்தில் இருந்து நூற்றுக்கணக்கான வீரா்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனா். இதில் சேலத்தைச் சோ்ந்த தனியாா் பள்ளி மாணவா் சத்யன் (6), ஜூனியா் பிரிவில் பங்கேற்றாா்.

குறிப்பாக, 7 வயதுக்கு உள்பட்ட சிறுவா்களுக்கான நீச்சல் போட்டியில் தமிழக அணி சாா்பில் 3 பிரிவுகளில் கலந்து கொண்ட சத்யன், 2 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கங்களை வென்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றாா்.

Advertisement

Advertisement

இதன்மூலம் இந்திய அளவில் துடுப்பு நீச்சல் போட்டியில் மிகக் குறைந்த வயதில் தங்கப் பதக்கம் வென்று, ஒட் டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற முதல் சிறுவன் என்ற சாதனையையும் படைத்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments