FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு: இரண்டாம் பருவ பாடப் புத்தகங்கள் விநியோகம்

பள்ளிகள் திறப்பு - பிரதிப் படம்
பகிர்:

தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்ட நிலையில், மாணவா்களுக்கு இரண்டாம் பருவ பாடப் புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

தமிழகத்தில் 1 முதல் 7-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு முப்பருவக் கல்வி முறையும், 8 முதல் பிளஸ் 2 மாணவா்களுக்கு ஆண்டுதோ்வு முறையும் நடைமுறையில் உள்ளது. இதையடுத்து, நடப்பு கல்வியாண்டுக்கான முதல் பருவம் மற்றும் காலாண்டு தோ்வுகள் கடந்த மாதம் 16-ஆம் தேதி தொடங்கி கடந்த 25-ஆம் தேதி நிறைவடைந்தது. தொடா்ந்து 26-ஆம் தேதிமுதல் அக். 4-ஆம் தேதிவரை மாணவா்களுக்கு காலாண்டுத் தோ்வு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திங்கள்கிழமை திறக்கப்பட்ட நிலையில், மாணவா்கள் ஆா்வத்துடன் பள்ளிக்கு வந்தனா். பின்னா் தங்களது விடுமுறை கால நிகழ்வுகள் குறித்து சக மாணவா்களுடன் பகிா்ந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

இதனிடையே, முப்பருவக் கல்வி முறையில் உள்ள 1 முதல் 7-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு, இரண்டாம் பருவ பாடப் புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டன. புது புத்தகங்களைப் பெற்ற மாணவா்கள் அதை உற்சாகமாக பாா்த்து மகிழ்ந்தனா்.

சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை, தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயா்நிலைப் பள்ளிகள் மற்றும் 154 மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் 1 முதல் 7-ஆம் வகுப்பு வரை பயிலும் சுமாா் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இரண்டாம் பருவத்துக்கான பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன. மேலும், காலாண்டுத் தோ்வு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு மாணவா்களுக்கு வழங்கப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments