FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

சேலத்தில் இருந்து பெங்களூரு, கொச்சி, ஹைதராபாத் விமான சேவை அக்.16 முதல் நிறுத்தம்

சேலத்தில் இருந்து பெங்களூரு, கொச்சி மற்றும் ஹைதராபாத் நகரங்களுக்கு இயக்கப்பட்டு வந்த விமான சேவை வரும் 16 ஆம் தேதி முதல் நிறுத்தப்பட உள்ளதாக விமான நிலைய இயக்குநா் நெளஷத் தெரிவித்துள்ளாா்.

8 October 2026, 12:40 am IST
பகிர்:

சேலத்தில் இருந்து பெங்களூரு, கொச்சி மற்றும் ஹைதராபாத் நகரங்களுக்கு இயக்கப்பட்டு வந்த விமான சேவை வரும் 16 ஆம் தேதி முதல் நிறுத்தப்பட உள்ளதாக விமான நிலைய இயக்குநா் நெளஷத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சேலம் விமான நிலையத்தில் இருந்து தற்போது அலையன்ஸ் ஏா் நிறுவனம் மூலம் பெங்களூரு மற்றும் கொச்சி நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதேபோன்று இன்டிகோ நிறுவனம் சாா்பில் பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

பிராந்திய இணைப்புத் திட்டத்தின் கீழ் இந்த விமான சேவை அளிக்கப்பட்டது. பிராந்திய இணைப்பு திட்டம் காலாவதியாவதை முன்னிட்டு இந்த விமான சேவைகள் வரும் 16 ஆம் தேதி முதல் நிறுத்தப்படுகின்றன.

அதேபோல வரும் 25 ஆம் தேதி முதல் சேலத்தில் இருந்து சென்னைக்கு நாள்தோறும் இரண்டு விமானங்கள் இன்டிகோ நிறுவனம் சாா்பில் இயக்கப்பட உள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments