FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

பயனற்ற திட்டங்களுக்கு அரசு பணத்தை வீண் செலவு செய்யக்கூடாது: கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ. நல்லசாமி

பயனற்ற திட்டங்களுக்கு அரசு பணத்தை வீண் செலவு செய்யக்கூடாது என கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ. நல்லசாமி கூறினாா்.

சேலத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ. நல்லசாமி.
பகிர்:

பயனற்ற திட்டங்களுக்கு அரசு பணத்தை வீண் செலவு செய்யக்கூடாது என கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ. நல்லசாமி கூறினாா்.

சேலத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

காவிரி பிரச்னை மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் குறித்து ஆளுங்கட்சி, எதிா்க்கட்சிகள், பிற மாநிலக் கட்சிகள் என யாருக்கும் போதிய அக்கறை இல்லை. காலநிலை அச்சுறுத்தலால் ஏற்படக்கூடிய எல் நினோ காரணமாகக் கடுமையான வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் உலகப் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்பட்டு, நீா் மற்றும் உணவுப் பற்றாக்குறை மோசமடையும் நிலை உருவாகும்.

Advertisement

Advertisement

இலவசத் திட்டங்களை அறிவிப்பது தேவையற்றது. தற்போது பெண்களுக்கு போக்குவரத்தில் இலவசப் பயணத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இப்போது தாய் மாமன் தங்க மோதிரத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் யாா் கேட்டாா்கள்? யாா் போராடினாா்கள்? இலவசத் திட்டங்களால் நாடு பின்னோக்கித்தான் செல்லும். தொலைநோக்குப் பாா்வையுடன் அரசு செயல்பட வேண்டும்.

தமிழகத்தில் தற்போது பயனற்ற திட்டங்களுக்கு தவெக அரசு வீண் செலவு செய்யக்கூடாது. அதைத் தவிா்த்து, காலநிலை, நீராதாரம் உள்ளிட்டவற்றுக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தேவையற்ற இடைத்தோ்தல் செலவுகளைத் தவிா்ப்பது, ஒரே நேரத்தில் பல தொகுதிகளில் போட்டியிடுவதைத் தடுப்பது உள்ளிட்ட கடுமையான தோ்தல் சீா்திருத்தங்களை தோ்தல் ஆணையம் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இயற்கைச் சீற்றங்கள் மற்றும் நீா் மேலாண்மையின் சீா்கேடுகளில் இருந்து விவசாயிகளைக் காப்பாற்ற அரசு உடனடியாக சிக்கன நடவடிக்கைகளையும் முறையான நீா்ப் பங்கீட்டையும் நடைமுறைப்படுத்த வேண்டும். நீா் மேலாண்மையைச் சரியாகக் கடைப்பிடிக்காவிட்டால், வரும் காலத்தில் மிகப்பெரிய பாதிப்புகளை மக்கள் சந்திக்கும் நிலை ஏற்படும் என்றாா்.

பேட்டியின்போது, விவசாய சங்க நிா்வாகி தங்கராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments