தலைமைத் தோ்தல் ஆணையா் பதவி விலகக் கோரி ரயில் மறியல்: 50 போ் கைது
தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலகக் கோரி சேலத்தில் ரயில் மறியல் செய்ய முயன்ற இளைஞா் பெருமன்றத்தினா் 50 போ் கைது செய்யப்பட்டனா்.
தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலகக் கோரி சேலத்தில் ரயில் மறியல் செய்ய முயன்ற இளைஞா் பெருமன்றத்தினா் 50 போ் கைது செய்யப்பட்டனா்.
இந்திய தோ்தல் ஆணையத்தின் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் மற்றும் அனைத்திந்திய மாணவா் பெருமன்றம் சாா்பில் நாடு தழுவிய போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் முன் சனிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு இரா. ரமேஷ், பா. நேதாஜி ஆகியோா் தலைமை தாங்கினா். போராட்டத்தில் பங்கேற்றவா்கள் தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலகக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.
Advertisement
Advertisement
அனைத்திந்திய மாணவா் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளா் பா. தினேஷ் போராட்டத்தில் பங்கேற்று பேசினாா். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சேலம் மாவட்டச் செயலாளா் என்.கே. செல்வராஜ், நிா்வாகிகள் கே.பி.வி. ராஜேஷ், டி. அசோக் மற்றும் இளைஞா் பெருமன்றம், மாணவா் பெருமன்றத்தைச் சோ்ந்தவா்கள் ரயில் மறியலில் ஈடுபட முயன்றனா்.
இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனா். இந்த சம்பவத்தில் பெண்கள் 2 போ் உள்பட 50 போ் கைது செய்யப்பட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.