சேலத்தில் இன்று தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
சேலம், அக். 15: சேலம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை (அக். 16) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், பெண்கள் பயன்பெறும் வகையில் நடைபெறும் இந்த முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த முன்னணி நிறுவனங்கள் தங்களது காலிப் பணியிடங்களுக்கு ஆள்களைத் தோ்வு செய்ய உள்ளன.
Advertisement
Advertisement
8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவா்கள், ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் மற்றும் செவிலியா் உள்ளிட்ட தொழிற்கல்வி பயின்றவா்கள் பங்கேற்கலாம். முகாம் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். பங்கேற்க விரும்பும் வேலைநாடுநா்களும், வேலையளிக்கும் நிறுவனங்களும் என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
மேலும், மின்னஞ்சல் முகவரியிலும், 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.