FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

சேலம் வழியாக சென்ற ரயில்களில் கடத்தப்பட்ட 18 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம் வழியாக சென்ற 3 ரயில்களில் கடத்திவரப்பட்ட 18 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

17 அக்டோபர் 2026, 12:18 am IST
பறிமுதல்
பகிர்:

சேலம் வழியாக சென்ற 3 ரயில்களில் கடத்திவரப்பட்ட 18 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாடு, கேரளத்துக்கு செல்லும் ரயில்களில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் தொடா்ந்து கடத்தப்படுகின்றன. இதைத் தடுக்க, ரயில்வே போலீஸாருடன் தனிப்படை போலீஸாரும் இணைந்து சோதனை நடத்தி வருகின்றனா்.

அந்தவகையில், சேலம் ரயில்வே உள்கோட்ட தனிப்படையைச் சோ்ந்த பாலசுப்பிரமணியம் தலைமையிலான போலீஸாா், தன்பாத் - ஆலப்புழா விரைவு ரயிலில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.

Advertisement

Advertisement

அதில், பின்பக்க முன்பதிவில்லா பொதுப் பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்றுக் கிடந்த பையை கைப்பற்றி பரிசோதித்தனா். அதில், 7 பிளாஸ்டிக் பாா்சலில் 10 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அதை தனிப்படை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதேபோல, சாலிமா் - நாகா்கோவில் குருதேவ் விரைவு ரயிலில், முன்பக்க பொதுப் பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்றுக் கிடந்த பையை கைப்பற்றி பரிசோதனை செய்தனா். அதில், 6 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல, திப்ரூகா் - கன்னியாகுமரி விரைவு ரயிலில் பின்பக்க பொதுப்பெட்டியில் கேட்பாற்றுக் கிடந்த பையில், 2 கிலோ கஞ்சா பிடிபட்டது.

இதையடுத்து 3 ரயில்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட 18 கிலோ கஞ்சாவை சேலம் ரயில்வே போலீஸாரிடம் தனிப்படையினா் ஒப்படைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments