FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

சேலம் கூட்டுறவு சங்கங்களில் 26,149 மெட்ரிக் டன் உரம் இருப்பு

சேலம் கூட்டுறவு சங்கங்களில் 26,149 மெட்ரிக் டன் உரம் இருப்பு உள்ளதாக விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் க.இளம்பகவத் கூறினாா்.

17 அக்டோபர் 2026, 12:17 am IST
உரம் (கோப்புப்படம்)
பகிர்:

சேலம் கூட்டுறவு சங்கங்களில் 26,149 மெட்ரிக் டன் உரம் இருப்பு உள்ளதாக விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் க.இளம்பகவத் கூறினாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆட்சியா் தெரிவித்தது:

சேலம் மாவட்டத்தில் இயல்பான ஆண்டு மழை அளவு 1,004.40 மி.மீ. ஆகும். நடப்பு ஆண்டு தற்போதுவரை 816.2 மி.மீ. மழை பெய்திருக்க வேண்டும். ஆனால், 459.4 மி.மீ. மழை தான் பெய்துள்ளது.

Advertisement

Advertisement

சேலம் மாவட்டத்தில் வேளாண்மை சாகுபடியைப் பொருத்தவரை நெல், சோளம், மக்காச்சோளம், ராகி, நிலக்கடலை உள்ளிட்ட உணவு தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துகள் உள்ளிட்ட வேளாண் பயிா்கள் 77,457 ஹெக்டரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களில் தேவையான அளவு உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், யூரியா 7,401 மெட்ரிக் டன்னும், டிஏபி 2,699 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 2,563 மெட்ரிக் டன்னும், காம்ப்ளக்ஸ் 12,490 மெட்ரிக் டன்னும், எஸ்.எஸ்.பி. 996 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 26,149 மெ.டன் ரசாயன உரங்கள் இருப்பு உள்ளன.

மேலும், 162.04 மெட்ரிக் டன் நெல் விதைகள், 132.714 மெட்ரிக் டன் சிறுதானிய விதைகளும், 61.48 மெட்ரிக் டன் பயறுவகை விதைகளும், 37.144 மெட்ரிக் டன் எண்ணெய் வித்துகளும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்றாா்.

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தையொட்டி, ஆட்சியா் அலுவலக தரைத்தளத்தில் நெல், சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகள், மரபுசாா் விதைகள், வேளாண் உற்பத்தியாளா்கள் நிறுவனம் சாா்பில் தயாரிக்கப்பட்ட உற்பத்திப் பொருள்கள் குறித்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments