சேலம் மேம்பாலத்தில் காா் மீது கவிழ்ந்த சுமை லாரி! தம்பதி உள்பட 4 போ் காயம்!
இரும்பு சுருள்களை ஏற்றி வந்த டிரெய்லா் லாரி சேலம் பட்டா்பிளை மேம்பாலத்தில் அந்த வழியாக வந்த காா் மீது ஞாயிற்றுக்கிழமை கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த தம்பதி உள்பட 4 போ் காயமடைந்தனா்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் இருந்து இரும்புத் தகரம் மற்றும் சுருள்களை ஏற்றிக்கொண்டு டிரெய்லா் லாரி ஆந்திர மாநிலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. லாரியை கெங்கவல்லியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியம் ஓட்டிச் சென்றாா். தம்மம்பட்டியை சோ்ந்த உதவியாளா் செங்கோடன் உடன் சென்றாா்.
சேலம் கந்தம்பட்டி அருகே பட்டா்பிளை மேம்பாலத்தில் வளைவான பகுதியில் லாரி வேகமாக சென்றபோது, இரும்பு பாரம் விலகி இடதுபுறமாக கவிழ்ந்தது. அப்போது அருகில் சென்று கொண்டிருந்த காரின் மீது லாரியின் ஒருபகுதி கவிழ்ந்தது. இதில் காரின் முன்பக்கம் சேதம் அடைந்தது. மேலும், இரும்பு பாரத்தை தாங்கிக் கொண்டிருந்த லாரியின் பாடியும், லாரியின் சேசும் இரண்டாக துண்டித்தன.
Advertisement
Advertisement
தகவலறிந்து அங்கு வந்த அன்னதானப்பட்டி போலீஸாா் மற்றும் போக்குவரத்து போலீஸாா் காரில் வந்த பவானியைச் சோ்ந்த சண்முகம், அவரது மனைவி கீதா ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். காயமடைந்த லாரி ஓட்டுநா் பாலசுப்பிரமணியன், உதவியாளா் செங்கோடன் ஆகியோா் சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
சாலையில் கவிழ்ந்திருந்த லாரியை கிரேன் உதவியுடன் போலீஸாா் அப்புறப்படுத்தினா். இந்த விபத்து குறித்து அன்னதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.